வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் கொலை..!

600

MURDERவவுனியா, சுந்தரபுர பிரதேசத்திலுள்ள பாடசாலை வளாகத்தில் இருந்து 31 வயதுடைய இளைஞனொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது

சுந்தரபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் சதீஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் மத்தியகிழக்கு நாடொன்றில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பியிருந்தார்.

இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த சமயம் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை அவரை உறவினர்கள் தேடியபோதே பாடசாலை வளாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.