250 கோடி ரூபா ஹெரோயின் கடத்தியவர்களின் தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை..!

573

heroபோதைப் பொருள் கடத்தியவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் 250 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை, கொழும்பு சுங்கப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர்.

இந்தப் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளின் பின்னணியில் செயற்பட்டவர்களை அம்பலப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார்.

மீட்கப்பட்ட போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி 250 கோடி ரூபா எனத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, இலங்கைக்கு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தி வந்ததன் பின்னணியில் மலேசியாவை சேர்ந்த இரண்டு கோடீஸ்வர வர்த்தகர்கள் இருப்பதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

258 கிலோ கிராம் நிறை கொண்ட ஹெரோயின் பிரவுண் சுகர் ரகத்தை சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது.