கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அம்பன்பொல – வெரஹெரயாம பிரதேசத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 24 வயதுடைய ரொஷான் எனத் தெரியவந்துள்ளது.
இவரது சடலம் அம்பன்பொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





