
இலங்கை பொலிஸ் மோப்பநாய் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மோப்பநாய் திருமண வைபவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மோப்ப நாய்கள் இரண்டின் திருமண வைபவம் அண்மையில் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெற்றது.
அதன்மூலம் இலங்கையின் புராதன சிங்கள திருமண கலாசாரத்திற்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலாசார அமைச்சு உள்ளிட்ட அமைப்புக்கள் விசனம் தெரிவித்திருந்தன.
இந்த திருமண வைபவ ஏற்பாடு குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.





