தொப்புள் கொடியுடன் குழிதோண்டி புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!!

941

baby

கோவையில் பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன் குழி தோண்டி புதைக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த தாளியூரில் ராஜேந்திரன் என்பவரது தென்னை மரத் தோப்பு உள்ளது. இந்த தோப்பில் நேற்று தொழிலாளர்கள் தோட்டவேலை செய்து கொண்டிருந்த பொழுது திடீரென்று குழந்தை அழுகும் குரல் கேட்டுள்ளது. உடனடியாக வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனவைவரும் ஓடிப்போய் பார்த்துள்ளனர்.

அங்கிருந்த ஒரு குழிக்குள், ஓலை வைத்து தொப்புள் கொடி உடலில் சுற்றப்பட்ட நிலையில் எறும்புகள் மொய்த்த நிலையில் பச்சிளம் குழந்தை கிடந்துள்ளது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குழந்தையை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களில் ஒடிசா, உத்திர பிரதேசம், பீகார் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்களில் நிறைமாத கர்ப்பினி யாராவது தான் இந்த நாச வேலையில் ஈடுபட்டிருக்க கூடும். மேலும், குழந்தையை யாருக்கும் தத்து கொடுப்பதாக இல்லை, குழந்தையின் தாயாரை தேடி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.