இன்று நாடு முழுவதும் மழை பெய்யும்..!

529

weatherநாட்டின் பல பாகங்களிற்கும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளம், காலி தொடக்கம் பொத்துவில் வரையான கடற் பகுதிகள் மழை அல்லது மின்னல் தாக்கத்திற்கு உட்படும் என அவ்நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இடையிடையே காற்று மணத்தியாலத்திற்கு 20 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று காலை முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என தெரவிக்கப்பட்டுள்ளது.