இலங்கையில் சீனத் தலையீடு கவலைக்குரியது – இந்திய பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை..!

694

baratஇந்தியாவின் பின்வாசலாக உள்ள இலங்கையில், அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை, கவலைக்குரிய விடயமாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கொள்கை ஆய்வு மையத்தின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆய்வுப் பேராசிரியர் பாரத் கர்நாட் தெரிவித்துள்ளார்.

நொய்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழக சட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் நேற்று நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புவிசார் அரசியலும் இந்திய மூலாபாயமும் என்ற தலைப்பில் உரையாற்றிய பேராசிரியர் பாரத் கர்நாட்,

பாகிஸ்தானுடன் மட்டுமன்றி சீனாவுடனும் கூட, இந்தியா பாதுகாப்பு ரீதியாக செற்பாட்டு நிலையில் இருக்க வேண்டும்.

பாகிஸ்தான், நேபாளம். பூட்டான் உள்ளிட்ட ஏனைய அண்டை நாடுகளிலும் சீனத் தலையீடு அதிகமாக உள்ள நிலையில், இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.