ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த தென் ஆபிரிக்க வீரர்கள்!!

500

south africaசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் தென் ஆப்ரிக்க வீரர் ஹசீம் அம்லா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளின் சந்தர்போலும், தென் ஆபிரிக்காவின் டி வில்லியர்சும் இடம்பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆபிரிக்க வீரர்களான டேல் ஸ்டெயின், பிளாந்தர் ஆகியோர் முதல் இரு இடங்களைப் பிடித்தனர்.

இந்திய அணியின் அஸ்வின் 8வது இடத்தில் உள்ளார். அதேசமயம், சிம்பாவேக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் அஜ்மல் 3ம் இடத்தைப் பிடித்துள்ளார்.