நான் அரசியல்வாதியும் கிடையாது தமிழகத்தில் எந்தக்கட்சியையும் சார்ந்தவனும் இல்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
தலைவா திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி குறித்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இப்படத்தில் நடித்த நடிகர் விஜய், நடிகை அமலாபால், படத்தின் இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகளூக்கு அவர் எந்தவித தயக்கமும் இல்லாமல் பதில் அளித்தார்.
கேள்வி : தலைவா படம் தாமதமாகிக்கொண்டே சென்றபோது ஏன் நீங்கள் மீடியாவை அழைத்துப் பேசவில்லை?
பதில் : தலைவா பட பிரச்சனையில் என் ரசிகர்களை நான் அமைதிகாக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தேன். எப்படியும் படம் வெளியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் ஊடகத்தினரை சந்தித்து பேசவேண்டாம் என்று முடிவெடுத்தேன்.
கேள்வி : தமிழகத்தில் வெளியாக தாமதம் ஆனாலும் பிறமாநிலங்களில் வெளியாகி வசூலை அள்ளியதே?
பதில் : தலைவா படம் பிற மாநிலங்களில் வெளியாகி இதுவரை இல்லாத அளவிற்கு ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் பிரச்சனை இருந்ததால் அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.
கேள்வி : தலைவா படம் அரசியலுக்கு சீக்கிரம் வந்துவிடுவீர்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறதா?
பதில் : தலைவா படத்திலையும் நாங்க அதைப்பற்றி சொல்லவில்லை. நானும் அப்படிச்சொல்லவில்லை. நீங்களாகத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. நான் அரசிய லுக்கு வரப்போகிறேன் என்று எங்கேயும் நான் சொன்னதில்லை.
எனக்கு அரசியலில் ஆர்வமில்லை. சினிமாவில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. நான் அரசியல்வாதி இல்லை. எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவனும் இல்லை. நான் எல்லோருக்கும் பொதுவான ஒரு நடிகன்.
கேள்வி : வாழ்க்கையின் துயரமான நாள்?
பதில் : என் வாழ்க்கையின் துயரமான நாள் தலைவா படத்தின் தாமதத்தால் ரசிகர் தற்கொலை செய்துகொண்ட நாள்தான்.