நடிகை சிந்துமேனன் தற்கொலைக்கு முயன்றதாக அவரது படத்துடன் பரபரப்பு செய்தி வெளியானது. தூக்க மாத்திரையை சாப்பிட்டு சாக துணிந்தார் என்றும் கூறப்பட்டது.
சிந்துமேனன் தமிழில் சமுத்திரம், கடல் பூக்கள், ஈரம் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மலையாள மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
சிந்துமேனனுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ் இளைஞர் பிரபுவுக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் சுபத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில்தான் அவரைப் பற்றி வதந்தி பரவியது.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வெளியான செய்திக்கு சிந்துமேனன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது. நான் லண்டனில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்றார்.