கொடிகாமம் – கச்சாய் பகுதியில் இன்று அதிகாலை 12.45 அளவில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் சகோதரியை இவ்வாறு வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 01.30 அளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
39 வயதுடைய என்டன் ஜயமேரி மற்றும் 18 வயதுடைய லோகேந்திரன் திவேஜனி ஆகிய இருவரே கொலை செய்யப்பட்டவர்களாவர்.
சம்பவத்தை அடுத்து சந்தேகநபர் அப்பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சடலங்கள் சம்பவ இடத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மரண விசாரணை இடம்பெறவுள்ளது.
கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





