நாடு முழுவதிலும் இடி, மின்னல் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..!

790

lightநாடு முழுவதிலும் இடி மின்னல் தாக்குதல் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் மின்னல் தாக்கி பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மழை நேரங்களில் திறந்த வெளிகளில் சஞ்சரித்தல், மின்சார உபகரணங்கள், உலோகப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதனை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

நீர் நிலைகளில் சஞ்சரிப்பதும் ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மின்னல் தாக்கி இருவர் கொல்லப்பட்டனர்.