வவுனியா மாங்குளம் விபத்தில் ஒருவர் பலி!!

587

accident

வவுனியா மாங்குளம் பொலிஸ் பிரிவின் வவுனியா – யாழ்ப்பாணம் வீதி இந்துப்புரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் ஒன்று அதை செலுத்தியவரின் கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

வில்வராயன்கட்டு தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான க.மயூரன் என்பவரே விபத்தில் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.