
சென்னை ஹோட்டல் அதிபர் ரகுபதி. இவரது மனைவி மல்லீஸ்வரி (57). வட மாநில திருக்கோவில்களுக்கு புனித யாத்திரை சென்று திரும்பினார்.
திடீரென்று மல்லீசுவரிக்கு வலிப்பு வந்தது. இதனால் அவரை ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் கோமா நிலைக்கு சென்றார்.
அவரது தலைக்கு செல்லும் இரத்தக்குழாய்கள் பலவீனம் அடைந்து வெடித்ததால் மூளையில் இரத்தம் உறைந்தது. இதனால் அவரது மூளை செயலிழந்தது.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அவரது கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றை வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் எடுத்தனர்.
பின்னர் அவற்றை உயிருக்கு போராடிய 3 பேருக்கு பொருத்தினார்கள். மல்லீசுவரி இறந்தாலும் அவரால் 3 பேர் உயிர் வாழ்கிறார்கள்.
மனைவியை இழந்த ரகுபதி எல்லா சமூக சேவைகளையும் விட உடல் உறுப்புதானம் சிறந்தது என்று உணர்ச்சி ததும்ப கூறினார். மேலும் இந்த உறுப்புகள் தானத்தின் மூலம் தனது மனைவியின் இலட்சியம் நிறைவேறி இருப்பதாகவும் கூறினார்.





