இந்தியாவில் இளம் ஜோடிகளை இரண்டு இளைஞர்கள் தடியால் அடித்து உதைக்கும் பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இளம் ஜோடிகள் அப்பகுதியில் ஒரு முகவரியை பற்றி விசாரித்துக்கொண்டிருந்த போது, இளைஞன் ஒருவன் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணும் அவரது கணவரும், இளைஞரை தாக்கியுள்ளனர். இதைக்கண்ட அந்த இளைஞரின் நண்பர் தடியால் அந்த ஜோடியை சரமாரியாக தாக்குகிறார்.
இதில் அப்பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஜோடி தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது பொலிசில் புகார் அளித்துள்ளனர்.






