கல்லூரி முதல்வராக இருந்த திருநங்கைக்கு நேர்ந்த விபரீதம்!!

650

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் முதல்வராக நியமிக்கப்பட்ட திருநங்கை ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினமா செய்திருப்பது, திருநங்கைகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரியில் கடந்த 2015 ஆம் ஆண்டு திருநங்கையான மனாபி பண்டோபாத் யாய் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஒரு திருநங்கை கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டது மிகவும் பெருமையாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் மனாபி தன்னுடைய கல்லூரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பலருக்கும் முன்னுதாரனமாக இருந்த மனாபி திடீரென்று ராஜினாமா செய்திருப்பது, திருநங்கைகள் பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், புதுப்பெண்ணைப் போன்ற நிலையில் இருப்பதாக நினைக்கிறேன். திருமணமாகி வீட்டுக்கு வரும் புதுப்பெண்ணை வரவேற்பதும், ஒரு வருடத்துக்குப் பிறகு, அவளை கொடுமை செய்து எரித்துக் கொள்வார்கள்.

அது போன்று தான் தன் கல்லூரியில் தொடர்ச்சியான போராட்டங்களால் தான் சோர்வடைந்துவிட்டேன். ஏராளமான நம்பிக்கையோடு உள்ளே வந்தேன், ஆனால் அவை எல்லாம் தளர்ந்து விட்டது.

தற்போது தோற்றுவிட்டதாக உணர்கிறேன் என்று மனம் உருகி கூறியுள்ளார். மேலும் இவர் முதல்வராக இருந்த போது கல்லூரியில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் போராட்டம் போன்றவை இவரது ராஜினாமாவுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2003ம் ஆண்டு பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனாபி, அதே மாவட்டத்தில் விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் என்றும் கூறப்படுகிறது.