தம்புள்ளை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று போ் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தம்புள்ளை- பக்கமுன வீதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கண்டலம பிரதேசத்தில் இருந்து பக்கமுன பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் பக்கமுன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளனர்.
19 முதல் 20 மதிக்கதக்க யுவதியும் 19 வயதான இளைஞனும் 30 வயதான நபருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





