புத்தர் நேபாளத்தில் தான் பிறந்தார் – முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா..!

843

buddhaஒரு தனியார் தொலைகாட்சி தொடரில் புத்தர் இந்தியாவில் பிறந்தார் என வலியுறுத்தப்பட்டது. இது நேபாளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேபாள இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடத் தொடங்கினார்கள்.
பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் நேபாளத்தை சேர்ந்த பலர் எதிர்த்து கருத்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், புத்தர் நேபாளத்தில் உள்ள லும்பினி என்ற இடத்தில் தான் பிறந்தார்.

இதில் எந்தவித சந்தேகமோ, சர்ச்சையோ இல்லை. உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம். இந்த பிரச்சினை தொடர்பாக இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.