மன்னார் முருங்கனில் மாடு வெட்டும் நிலையம் முற்றுகை : அறுவர் கைது!!

585

cow

முருங்கன் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மாடு வெட்டும் நிலையம் முற்றுகையிடப்பட்டு அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 75 கிலோ கிராம் மாட்டிறைச்சி மற்றும் மாடு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்