ஜல்லிக்கட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் : உடன் அமுலுக்கு வரும் அவசர சட்டம்!!

609

ஜல்லிக்கட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஒருங்கிணைந்து அவசரச் சட்டம் கொண்டு வருவதை உறுதி செய்துள்ளன.

குறித்த அவசர சட்டம் நேற்று கொண்டு வந்தபோதும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அவசர சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை பத்து மணியளவில் அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.