தண்ணீர் குடம் காணாமல் போன சம்பவத்தில் மாமியாரை மருமகன் கொலை செய்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஈரோடு அருகே தண்ணீர் குடம் காணாமல் போனது தொடர்பாக கணவன் மனைவியிடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை தாக்க எடுத்த அரிவாள் மனை அருகில் படுத்திருந்த மனைவியின் தாயார் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி நந்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு சௌந்தரம் என்ற மனைவி உள்ளார். 58 வயதான ராமசாமி கூலித்தொழிலாளியாக உள்ளார்.
இந்நிலையில் சௌந்தரத்தின் மனைவி கடந்த வாரம் தெருவிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது குடம் காணாமல் போயுள்ளது.
இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடந்த வாரம் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராமசாமி, தனது மனைவியின் தலையில் அரிவாள் மனையால் ஓங்கி அடித்துள்ளார்.
அப்போது அரிவாள் மனை இரண்டாக உடைந்து வீட்டில் படுத்திருந்த சௌந்தரத்தின் தாயார் பெரியம்மா தலையில் வீழ்ந்து பதம் பார்த்தது. இதனால் அவரது தலையில் இருந்து இரத்தம் கொட்டியது.
இதையடுத்து காயமடைந்த பெரியம்மா ஈரோடு அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை யளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி பெரியம்மா உயிரிழந்தார். இதையடுத்து மாமியார் கொலைக்கு காரணமான மருமகன் ராமசாமி கைது செய்யப்பட்டார்.






