இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 5 படகுகளுடன் நேற்று (18) இரவு காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து இந்திய இணையமொன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி,
புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த 19 தமிழக மீனவர்கள் தமிழக எல்லை பகுயில் மீன்களை பிடித்து கொண்டு இருந்தனர்.
அங்கு வந்த இலங்கை கடற்படையினர் காரணம் ஏதும் இன்றி அவர்களை கைது செய்தனர்.
மீனவர்கள் பிடித்து வைத்து இருந்த மீன்களை எரிந்து கடலில் வீசினர். பின்னர் தமிழ்க மீனவர்கள் வைத்து இருந்த 5 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைபற்றி பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் இலங்கை கடற்படை வீரர்கள் விசாரித்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படைவீரர்களால் கைது செய்வது பின்னர் விடிவிக்கபடுவது தொடர்கதையாக உள்ளது.





