பேஸ்புக்கை கலக்கிய கருணாநிதி!!

622

KARUNANIDHI

திமுக தலைவர் கருணாநிதி பேஸ்புக்கில் பலர் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார்.
சாதாரண அறிக்கை, கேள்வி பதில் பாணி அறிக்கை, கடித வடிவ அறிக்கை என்று அறிக்கையில் பல யுத்திகளைப் புகுத்து அசத்திய கருணாநிதி தற்போது பேஸ்புக் மூலமாகவும் பதிலளிக்கிறார்.

கேள்வி: முதல்வர் தான் கூறும் குட்டிக் கதைகளை கூட மேடைகளில் பார்த்து பார்த்து தான் படிக்கிறார், இதனை பற்றி உங்களது கருத்து என்ன

பதில்: குட்டிகளைப் பார்த்துப் படிப்பது தாயின் பழக்கம் தானே!

கேள்வி: தமிழக அரசு நினைத்தால் மட்டுமே தமிழக அரசின் ஆதரவு பெற்றால் மட்டுமே தமிழ் திரைப்படங்கள் வெளியாகும் சூழல் தமிழகத்தில் நிலவி வருகிறது, இதற்கு உங்களது பதில்

பதில்: இந்த ஆட்சிக்கு இதுதான் உதாரணம்.

கேள்வி: பார்வையற்றவர்கள் கடந்த 10 நாட்களாக முதல்வரை சந்திக்க வேண்டுமென்று கூறி வருகிறார்கள் இதுவரை சந்திக்கவில்லை. 3 பேர் கவலைக்கிடமாக உள்ளார்கள் ஏன் அ.தி.மு.க அரசு அவர்களை சந்திக்கவில்லை.

பதில்: தமிழக அரசுக்கு இதயமே பழுதாகிவிட்டது

கேள்வி:அ.தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு நிறைவேற்றி உள்ளதா

பதில்: இல்லை

கேள்வி: முதன் முதலில் பேரறிஞர் அண்ணா அவர்களை நீங்கள் எங்கு சந்தித்தீர்கள்

பதில்: திருவாருர்.

கேள்வி: உங்களது வாழ்நாளில் உங்களுக்கு பிடித்த, உங்களைக் கவர்ந்த திரைப்பட பாடல் எது?

பதில்: பாவ மன்னிப்பு திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய வந்த நாள் முதல் இந்த நாள் வரை மனிதன் மாறிவிட்டான் பாடல்.

கேள்வி: வாக்குகளைப் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் தானியங்கி வாக்கு இயந்திரத்தைப் பற்றி உங்களது கருத்து

பதில்: அது பற்றிய கருத்து சர்ச்சையில் இருக்கிறது ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

கேள்வி:இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் தி.மு.க வின் நிலைப்பாடு?

பதில்: ஏற்றுக்கொள்ள மாட்டோம், கண்டிப்போம்.

கேள்வி: கொமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது இதில் இந்தியா பங்கேற்பது குறித்து ஏன் இன்னும் முடிவு அறிவிக்கவில்லை

பதில்: எதிர்பார்க்கும் முடிவுகளை எப்போதுமே தாமதமாகத்தான் அறிவிக்கும்.

கேள்வி: இந்திய சினிமா 100 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டிய விழா சென்னையில் நேற்று முடிவடைந்தது இதில் விருது பெற்றோருக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்

பதில்: வாழ்த்துக்கள்.