கணவருடன் விவாகரத்து : காவ்யா மாதவனுக்கு மீண்டும் திருமணம்!!

447

kaviya

பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன். இவர் தமிழில் காசி, என் மன வானில், சாது மிரண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். காவ்யா மாதவனுக்கும் குவைத்தில் தொழில் அதிபராக உள்ள நிச்சல் சந்திராவுக்கும் கடந்த 2009ல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு கணவருடன் குவைத்தில் குடியேறினார். ஆனால் சில மாதங்களிலே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கேரளா திரும்பினார். 2010ல் விவாகரத்து கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2011ல் அவருக்கு விவகாரத்து கிடைத்தது. அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தார். தற்போது மீண்டும் திடீரென சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார்.

புதுப்படங்களில் நடிக்க இயக்குனர்கள் அவரை அணுகியபோது மறுத்துவிட்டார். மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதே சினிமாவை விட்டு ஒதுங்குவதற்கு காரணம் என மலையாள பட உலகில் செய்தி பரவி உள்ளது. மாப்பிள்ளை யார் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.