விரைவில் அரசியலுக்கு வருவேன்: நமீதா!!

518

Namitha Photo Shoot Pics

நடிகை நமீதா அரசியலில் ஈடுபட தயாராகிறார். சமீபகாலமாக சமூக பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். ரத்தானம், கண்தானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

ராயப்பேட்டையில் பெண்களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுத்தார். தொண்டு நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இலவசமாகவே பங்கெடுத்து வருகிறார். அரசியலில் ஈடுபடும் திட்டம் உள்ளதா என்று நமீதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது..

எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. எனவே விரைவில் அரசியலுக்கு வருவேன். எந்த கட்சியில் சேர்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பாரதீய ஜனதா சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள நரேந்திரமோடி எனது குஜராத் மாநிலத்துக்காரர் என்பதால் அக்கட்சியில் நான் சேரப்போவதாக செய்திகள் வந்துள்ளன. அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை.

அரசியல் கட்சிகளில் எந்த கட்சியில் சேர்வது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறேன். விரைவில் முடிவு எடுத்து அறிவிப்பேன். சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து வருகிறேன் என்று நமீதா கூறினார்.