புத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சுமித் சந்தன, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புத்தளத்தில் வாக்குச் சீட்டுக்கள் சில கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணைகள் முடியும்வரை சுமித் சந்தன, கொழும்பு பிரதான தேர்தல் திணைக்களத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.





