75 லட்சம் ரூபா பெறுமதியான 11 தங்கத் தகடுகளை மலவாயிலில் மறைத்து இந்தியாவிற்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மும்பை நகர் நோக்கிச் செல்லவிருந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவரிடம் இருந்து 1500 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
தங்கம் கடத்த முயன்ற 8வது நபர் இந்த மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தங்கக் கட்டிகள் விழுங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் நான்கு பேரிடமிருந்து 26 தங்க கட்டிகள் மீட்டெடுக்கப்பட்டன.
இவர்களில் நான்கு பேரிடமே தங்கக்கட்டிகள் இருந்துள்ளன. இன்னும் 3 தங்க கட்டிகள் இருவரது வயிற்றில் உள்ளதாகவும் தொடர்ந்தும் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்க திணைக்கள பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
முதலாவது நபரின் வயிற்றில் 13 தங்கக் கட்டிகள் இருப்பதாக ஸ்கேன் மூலம் தெரிந்த போதும் 15 தங்கக் கட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன.
இரண்டாவது நபரின் வயிற்றிலிருந்து 6 தங்க கட்டிகள் எடுக்கப்பட்டன.
3 ஆவது நபரின் வயிற்றில் ஐந்து தங்கக் கட்டிகள் இருப்பதாக தெரிந்த போதும் 6 தங்க கட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன.
நான்காவது நபரின் வயிற்றிலிருந்து ஒரு தங்க கட்டி மட்டுமே எடுக்கப்பட்டது.
ஏனைய மூரிடம் வயிற்றினுள் தங்கக் கட்டிகள் இல்லை என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.





