பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தையும் தற்கொலை!!

455

sucide1

தனது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து தானும் விஷம் அருந்தி உயிரிழந்த தந்தை பற்றிய செய்தி கல்கிஸ்ஸை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

கல்கிஸ்ஸை வடரஸ்பல வீதி பிரதேசத்திலேயே இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. தனது எட்டு வயதான மகளுக்கு விஷம் கொடுத்த தந்தை தனது மகள் இறந்ததன் பின்னர் தானும் விஷம் குடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த தந்தை 43 வயதானவர் எனவும் இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் தனது மனைவி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வாறு செய்துள்ளார்.