போலி ஆவணங்களை தயாரித்து அதன்மூலம் இலங்கைவர முயன்ற நான்கு இலங்கை பிரஜைகள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை – மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த பாக்கிய நாதன் (33), சசிதரன் (26), மரியம் சர்மிளா, மற்றும் ஜீவன்தாரா (19) ஆகிய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் தங்கியிருந்த இவர்கள் மீண்டும் இலங்கை செல்ல மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சென்றுள்ளனர்.
அப்போது, அவர்களின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததை விட அதிக நாட்கள் சென்னையில் தங்கியிருந்ததும், அதற்காக போலி சான்றிதழ் தயாரித்து இருந்ததும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவர்கள் நால்வரும் மீனம்பாக்கம் விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





