வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

540

வவுனியா – ஆச்சிபுரம் கிராமத்தில் 2014ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறையும், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்குமாறும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், நட்ட ஈட்டுப்பணத்தை செலுத்தத்தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும், தண்டப்பணம் செலுத்தத்தவறும் பட்சத்தில் ஒரு மாதம் சாதாரண சிறையும் வழங்கப்பட்டுள்ளது.