அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா, கிஷோர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் ஆரம்பம்.
விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து ஏ.எம்.ரத்னம் இப்படத்தினைத் தயாரித்துள்ளார்.
படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவித்து விட்டனர். பாடல்களும் வெளியாகி பட்டையைக் கிளப்புகின்றன.
இந்தப் படத்தைத் தெலுங்கிலும் டப் செய்து வெளியிட இருக்கின்றனர். ஏற்கெனவே பில்லா, மங்காத்தா ஆகிய இரண்டு படங்களும் அங்கு வசூலை வாரிக் குவித்ததால் இந்த ஏற்பாடாம்.
தெலுங்கில் ஆட்டம் ஆரம்பம் எனப் பெயர் வைத்துள்ளனர். தமிழிலும் இந்த பெயரை வைக்கத்தான் முதலில் நினைத்தார்களாம். ஆனால் என்ன நினைத்தார்களோ ஆரம்பம் என்று மட்டுமே வைத்துவிட்டனர்.





