ஐ.தே.க.வில் புதிய தலைவர் சபை உருவாகிறது: கரு தலைவராகிறார்?

427

ranilஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்திச் செல்ல தலைவர் சபை ஒன்றை அமைப்பது தொடர்பில் இன்று (04) மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய பிக்குகள் முன்னணி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளனர்.

5 அல்லது 9 பேர் அடங்கிய தலைவர் சபை ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய பிக்குகள் முன்னணி ஆலோசனை முன்வைத்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் அந்த தலைவர் சபையில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் சபையின் தலைவராக கரு ஜயசூரிய அறிவிக்கப்பட வேண்டும் என அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எதிர்வரும் காலங்களில் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் தலைவர் சபைக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டசாலை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக திஸ்ஸ அத்தநாயக்க அளித்த இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதன்படி குண்டசாலை தொகுதிக்கு புதிய ஒருவர் அமைப்பாளராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.