ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – சிம்மம்!!

382

simmam

எவ்வளவு சிக்கலான விஷயத்திலும் குழப்பம் இல்லாமல் சட்டென்று முடிவெடுப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு காரிய அனுகூலம் தரும் மாதமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

ஒக்டோபர் 15ற்கு பிறகு தொழிலிலும் வியாபாரத்திலும் இருந்த பிரச்னைகள் தீர்ந்து நல்ல நிலை உண்டாகும். பழைய கடன்களும் வந்துசேரும். வியாபாரம் தொடர்பான வெளிநாட்டுப் பயணம் உண்டாகலாம். குருவின் பார்வையால் லாபம் அதிகரிக்கும் உடல் ஆரோக்யம் பெறும்.

மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும். சனியுடன் சஞ்சரிக்கும் ராகுவின் மூன்றாம் பார்வையால் மற்றவர்களுடன் விரோதம், கௌரவபங்கம், வீண் அலைச்சல் ஆகியவை இருக்கும். ஆனாலும் சூரியனின் சஞ்சாரத்தால் மனக்கஷ்டம் குறையும்.

ஆனால் செலவு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. லாபஸ்தான குரு, தன ஸ்தான சூரியன் செல்வத்தை தருவார்கள்.

ஆன்மிக நாட்டம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான எல்லா பொருட்களும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். பெண்களுக்கு இந்த ஆண்டு முன்னேற்றங்களை தரும் ஆண்டாக இருக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். ஆனால், வீண் அலைச்சல் இருக்கும்.

மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மந்த நிலை மாறும்.

பரிகாரம் : ஞாயிற்றுக் கிழமையில் சிவனை வில்வார்ச்சனை செய்து வணங்குவதும் பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்கப் பெறும்.

சந்திராஷ்டமம் : 17, 18 திகதிகளில் சுயமாக இரவு நேரங்களில் வாகனத்தை இயக்குவதை தவிர்த்து விடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீ மஹாசிவாய நமஹ” என்ற மந்திரத்தை 18 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : பிரதோஷத்திற்கு சிவனுக்கும் நந்தீஸ்வரருக்கும் அபிஷேகத்திற்குப் பால் வழங்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, புதன், வியாழன்.
தேய்பிறை  : புதன், வியாழன்.