ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – தனுசு!!

401

thanusu

தன்னடக்கம் மிகுந்த நீங்கள் எதையும் மறைத்துப் பேசமாட்டீர்கள். இந்த மாதம் உங்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் ஓயாத வேலையும் அலைச்சலும் இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உத்யோக மாற்றம் உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் செலவும் அதிகரிக்கும்.

உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கும். தன தைரியாதிபதியின் உச்சபலத்தால் பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் நிலுவையில் உள்ள நிலுவைகள் வந்துசேரும். திருமணத் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. பண விஷயத்தில் கூடுமான வரையிலும் அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. குருவின் பார்வையால் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும்.

தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வரும் லாபம் தடைபடாது. சிலருக்கு குடும்பத்தை விட்டு உத்யோக நிமித்தமாக வெளியில் சென்று தங்க நேரிடும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது.

அடிக்கடி கோபமாகப் பேசநேரிடும். சில காரியங்கள் சரிவர முடியாமல் போக பேச்சே ஒரு காரணமாகி விடக்கூடும். அன்னியர் மூலம் செலவும் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவதில் வில்லங்கம் ஏற்படலாம். மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மனைவியின் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. சுறுசுறுப்பு குறைந்து சோர்வு உண்டாகலாம். எனவே வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு வயிறு தொடர்பான தொந்தரவுகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படும். சேமிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் மிகவும் கவனமாகப் படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது. கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும்.

பரிகாரம் : ராகு-கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

சந்திராஷ்டமம் : 1, 27, 28 திகதிகளில் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.

சொல்ல வேண்டிய மந்திரம் : தட்சிணாமூர்த்தி அஷ்டகம் படித்து வர மதிப்பும் மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.

சிறப்பு பரிகாரம் : நாரத்தங்காய் சாறு பிழிந்து பிரதோஷத்தன்று அபிஷேகத்திற்கு கொடுக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்.
தேய்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி.