பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்காக ஒரு கோடி ரூபா செலவில் மிருக்கக் சாட்சிசாலையொன்று உருவாக்கப்பட உள்ளது.
பத்தரமுல்ல ஜனகலா கேந்திர நிலையத்தை அண்டிய மூன்றரை ஏக்கர் பரப்பில் இந்த மிருகக்காட்சிசாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக சீனாவிலிருந்து மிருகங்கள் தருவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 25 விதமான மிருகங்கள் சீனாவிலிருந்து தருவிக்கப்பட உள்ளன.
இதற்கு பிரதி உபகாரணமாக அரசாங்கம் சீனாவிற்கு யானைகளை வழங்க உள்ளது.
எதிர்காலத்தில் சீனாவும் இலங்கையும் மிருகங்களை பரிமாறிக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக 5000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களில் 2500 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உலகத் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு கட்டுகுறுந்த பயிற்சி நிலையத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.





