
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி ஒருவர் இன்று காலை முதல் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் புதூரை சேர்ந்த அன்டனி ஜெயராஜ் என்பவரே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளார்.
இவரை பொலநறுவையில் உள்ள சிறைச்சாலைக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தன்னால் அங்கு செல்ல முடியாது என தெரிவித்தே அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வினவியபோது..
குறித்த கைதி தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர் ஏனைய கைதிகளுடன் அடிக்கடி முரண்படுவதுடன் ஏனைய சிறைக் கைதிகளை தாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவந்ததாகவும் இதன் காரணமாக அவரை பொலநறுவைக்கு இடமாற்ற தீர்மானித்ததாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சிறைக் கைதி மீது மேல் நீதிமன்றம் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் ஆகியவற்றில் இரு வழக்குகளும் உள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.





