அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி செய்த மருத்துவ மாணவி கைது!!

550

arrest1

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேவையாற்று மருத்துவராக காட்டிக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்த மருத்துவ மாணவி ஒருவரை கொஹூவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க கல்லூரி ஒன்றில் பயின்று வரும் இந்த மருத்துவ மாணவி மோசடி செய்த பணத்தை வைப்புச் செய்திருந்த வங்கியின் கணக்கு புத்தத்தை வைத்திருந்த பேராசிரியர் ஒருவரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவராக வேண்டும் என்பதற்காக தன்னை மருத்துவராக இனங்காட்டி இந்த பண மோசடியில் ஈடுபட்டதாக மாணவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கற்பதற்கு தேவையான புத்தகங்களை எடுப்பதற்காக இரவு நேரத்தில் கொழும்பு மருத்துவக்கல்லூரிக்குள் சென்று வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் சென்று மருத்துவர்களின் டெத்தஸ்கோப் மற்றும் ஆடைகளை அணிந்து தன்னை மருத்துவர் போல் இனங்காட்டிக் கொண்ட இந்த மாணவி மாத்தறை சேர்ந்த பெண்ணொருவரிடம் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவையும் கொஹூவல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரிடம் இரண்டு லட்சம் ரூபாவையும் பெற்றுள்ளார்.

இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியே இவர் அந்த பணத்தை பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.