வவுனியா மோதலில் இளம் குடும்பஸ்தர் படுகாயம்!!

498

வவுனியா – கோவில்புதுக்குளம் சந்தியில் நான்கு பேருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் (30) இரவு இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் ஒரு மணி நேரமாக அப்பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கோவில்புதுக்குளம் சந்தியில் நின்ற இரண்டு பேருக்கும் வீதியில் பயணித்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.

மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்தவர் 32 வயதுடைய எஸ்.ரஜீவ்காந் (சூப்பி) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக வவுனியா தமிழ்மொழிமூல அவசர பொலிஸ் சேவைக்கு (0766224949) தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் வவுனியா பொலிசார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.