மதவாச்சியில் கிணறு வெட்டி புதையல் தேடிய எழுவர் கைது!!

601

arrest1

மதவாச்சி விகாரை வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிணறு வெட்டும் தோரணையில் புதையல் அகழ்வில் ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மதவாச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புதையல் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று மதவாச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.