வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுடனான அணுகுமுறை தொடர்பான கருத்தரங்கு!!

730

 
இன்றைய தினம் (06.07) மனித உரிமைகள் வவுனியா காரியாலயத்தில் மாற்றுத்திறனாளிகளுடன் அணுகுமுறை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கலந்துரையாடல் வன்னி பிராந்தியத்தில் பணியாற்றுகின்ற மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைகள் தொடர்பில் பணியாற்றுகின்றவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் போன்ற பகுதிகளில் இருந்து செயற்பாட்டாளர்கள் வருகை தந்திருந்தார்கள். அவர்களுடன் விஷேட விதமாக மாற்றுத்திறனாளிகளுடன் எவ்வாறு அணுகுதல் தொடர்பாக மனித உரிமை அலுவலகத்தில் கலந்துரையாடப்பட்டது.

அவர்கள் பொதுஇடங்களை அல்லது தனியார் இடங்களை, அரச கட்டிடங்களை வந்து அணுகிகொள்வதற்கு ,சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு இருக்கின்ற உரிமைகள் தொடர்பில் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் போன்ற பகுதிகளில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

மனித உரிமை ஆணைகுழு அவர்களுடைய பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்திருக்கின்றார்கள். எதிர்வரும் காலங்களில் அவ்வாறான பிரச்சினை தொடர்பில் முன்னெடுத்து செல்ல இருக்கின்றது.

குறிப்பாக அவர்கள் வங்கிகளில் சேவையில் ஈடுபடும் போது, வைத்தியசாலையில் அணுகுவதில் , அரச ஸ்தாபனங்களில் அணுகுவதில் பிரச்சினை இருப்பதாக முறையிட்டிருக்கின்றார்கள். கூடுதலாக நகரசபையிலும், உள்ளுராட்சி மன்றங்களின் மத்தியில் பிரச்சினை எதிர் நோக்குவதாக தெரிவித்திருக்கின்றார்கள்.

அது தொடர்பில் பல்வேறு விதமான பிரச்சனைகளை முன்கொண்டுவந்திருக்கின்றார்கள். மனித உரிமைகள் ஆணைகுழு எதிர்வரும் காலங்களில் விரைவான நடவடிகையில் செல்ல இருக்கின்றார்கள்.

இக் கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், இச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கியதாக இம் மாதம் (27.07) இது சம்பந்தமான நிகழ்வு ஒன்று வவுனியாவில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மனித உரிமைகள் வன்னிப்பிராந்திய பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன, வவுனியா பிராந்திய காரியாலய சட்ட அதிகாரி சட்டத்தரணி ஆர். எல்.வசந்தராஜா, உயிரிழை, வரோட், ஓகன் போன்ற நிறுவனத்தின் அதிகாரிகள், வவுனியா , மன்னார், முல்லைத்தீவை சேர்ந்த மாற்று திறனாளிகள் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.