வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடமையை பொறுப்பேற்றார்!!

555

vada

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாக பொறுபேற்று கொண்டார்.

யாழ்.கோவில் வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்திலையே இன்று காலை 9.30 மணியளவில் அவர் தனது பொறுப்புக்களை ஏற்று கொண்டார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் வடமாகாண அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேவேளை முதலமைச்சருடன் பணியாற்ற உள்ள அதிகாரிகளையும் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.