கிராமவாசிகளால் தாக்கப்பட்ட பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸார் வைத்திசாலை அனுமதி!!

1208

police

கண்டி மாவட்டம் கலஹா -புபுரஸ்ஸ பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸார் தாக்குதலுக்கு உள்ளாகிய நிவையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு ரஜதலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.

புபுரஸ்ஸ பொலிஸ் காவலரணைச் சேர்ந்த பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ரஜதலாவ கிராமவாசிகள் பொலிஸார் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் காவலரணின் பொறுப்பதிகாரி, இரண்டு சாஜன்கள் பிரதேசத்திற்கு விசாரணைக்காக சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் கூரிய ஆயுதங்களினால் பொலிஸாரை தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மூன்று பொலிஸாரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த கிராமவாசி ஒருவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து கலஹா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.