தன் உயிரை கொடுத்து எட்டு நண்பர்களின் உயிரை காப்பாற்றிய இளைஞன்!!

558

தமிழகத்தில் நண்பனின் பிறந்தநாள் விழாவின் போது, நீரில் மூழ்கிய 8 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டு தன் உயிரை விட்ட இளைஞனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

சேலம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசு(19). இவர் தனது பிறந்த நாளின் காரணமாக உறவினரான மதன் என்பவரை அழைத்துள்ளார். இவர் திருச்சங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இருவரும் பிறந்த நாளை கொண்டாட மேட்டூரில் உள்ள காவிரி ஆற்றுப் பகுதிக்கு சென்றுள்ளனர். பிறந்தநாளை கொண்டாடிய அவர்கள், அதன் பின் அங்கிருக்கும் பரிசிலில் செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

அப்போது பரிசல் ஓட்டுனர், பரிசலில் 9 பேரை ஏற்றிச் செல்ல முடியாது என்று கூறியுள்ளார். இருந்தபோதும் அனைவரும் ஒரே பரிசலில் தான் செல்ல வேண்டும் என அவர்கள் கூறியதால் ஓட்டுனரும் சம்மதித்துள்ளார்.

ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பரிசல் கவிழ்ந்துள்ளது. பரிசல் கவிழ்ந்த வேகத்தில், ஓட்டுனர் கரைக்கு சென்றுள்ளார்.

ஆனால் படகில் சவாரி செய்த தமிழரசன் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 9 பேர் நீரில் தத்தளித்துள்ளனர். அப்போது நன்கு நீச்சல் தெரிந்த மதன் என்ற இளைஞர், அனைவரையும் காப்பாற்றியுள்ளார்.

இறுதியாக அவர் வர முயன்ற போது ஆற்றில் இருந்த களிமண்ணில், சிக்கியுள்ளார். அதில் இருந்து மீள முயன்றும், அவர் மீள முடியாததால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.