அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன பிரதானிகள் உள்ளிட்டோரின் வெளிநாட்டு விஜயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் அமைச்சர்கள் எந்தவொரு வெளிநாட்டு விஜயத்தையும் மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
அரச செலவு முகாமைத்துவம் மற்றும் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டு முன் ஆயத்தப்பணிகள் என்பனவற்றுக்காக இவ்வாறு வெளிநாட்டு விஜயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இதன்படி அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள், மேலதிக செயலாகளர்கள், திணைக்களப் பிரதானிகள் மற்றும் அரச நிறுவன பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட அனைவரினதும் அடுத்த மாத வெளிநாட்டு விஜயங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நவம்பர் மாதம் 1ம் திகதி முதல் 30ம் திகதி வரையிலான காலத்திற்கான வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.





