இலங்கையின் இராஜதந்திரி ஒருவர் ஐக்கிய நாடுகளின் உயர் பதவி ஒன்றுக்கு தெரிவாகியுள்ளார்.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட அமைச்சு ஆலோசகரான வருணஸ்ரீ தனபால ஐக்கிய நாடுகளின் 69வது அமர்வின் இரண்டாவது குழுவின் உதவி தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகம் இதனை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் குழு இதற்கான பரிந்துரையை மேற்கொண்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு வரையில் உலகலாவிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிப்பணிகளுக்கு தனபால அங்கம் வகிக்கும் பொறுப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனபால, 2011ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையில் அலுவலராக கடமையாற்றி வருகிறார்.





