அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பல நகரங்களில் இன்றைய வெயில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்தது.
சிட்னி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. சிட்னியில் 43.3 டிகிரி,விமான நிலையத்தில்42.6 என பல நகரங்களில் வெப்ப அளவு 40 டிகிரியை தாண்டிதான் இருந்தது.
வெயிலின் காரணமாக சிட்னி நகரில் மோனோ ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டது. சிக்னல் இணைப்பிற்கான கேபிள்கள் வெயிலின் வெப்பம் தாகாமல் இளகின. இதனால் பல இடங்களில் சிக்னல் வேலை செய்யவில்லை. மற்றொரு இடத்தில மின்சார ரயிலில் உள்ள சாதனம் வெயிலின் வெப்பம் தாங்காமல் பழுதானதால் ரயில் பாதியிலேயே நின்றது. இதனால் சுமார் 250க்கும் மேற்ப்பட்ட பயணிகள் ரயிலில் பல மணி நேரம் சிக்கி தவித்தனர்.
புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காட்டு தீ குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சுமார் 46,000 ஹெக்டர் பரப்பளவில் எரிந்து வரும் காட்டு தீயை அணைக்கும் பணியில் தீ அணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். முதியவர்கள் வெளியில் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மக்கள் அனைவரும் அதிக நீர் அருந்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வெப்பம் தாங்காமல் மக்கள் கடலில் நீராடி தங்கள் வெப்பத்தை தணித்துக் கொண்டனர்.
மொத்தத்தில் வெயில் அவுஸ்திரேலிய மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்தது.





