வவுனியாவில் இளைஞனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!!

715

 
வவுனியா சமயபுரம் அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீட்டின் மாமரத்திலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (19.08.2017) காலை 7.00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கணேசபுரம் அம்மன் கோவிலுக்கு அருகில் வசித்து வரும் மாரிமுத்து பிரசாந்தன் 26வயதுடைய இளைஞன் இன்று காலை அவரது வீட்டிலுள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே கட்டார் நாட்டிலிருந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு வீட்டிற்கு வந்த இளைஞன் வழமையாக இருந்துள்ளார். எனினும் இன்று அதிகாலை அயலவர்கள் மாமரத்தில் இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளதாக தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.