காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி..!

515

ACCIDENT_logoகாலி – கொழும்பு பிரதான வீதியில் ஹூணுபிட்டிய சந்த பாமுல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறியின் பின்பக்கத்தில் இருந்து பயணித்த நபர் விழுந்து, லொறியின் பின் சில்லுக்குள் சிக்குண்டு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த அந்நபர் சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றவேளை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மஹவெல, கஹதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இந்நபர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.