தமிழின படுகொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக்கூடாது, இலங்கையை அந்த மாநாட்டில் இருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவினர் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதையறிந்த பொலிசார் 23 மாணவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
இதை கண்டித்தும், சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் தியாகுவிற்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு கல்லூரி மாணவர்களை சேர்ந்த பிரபாகரன், ராஜ்குமார், கவியரசன், பிரசாத், சைமன், மதியழகன், கிருஷ்ணகுமார் ஆகியோர் நேற்று நள்ளிரவு கும்பகோணம் காந்தி பூங்கா அருகே திடீரென சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





