ஸ்பெயின் பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மூன்று அரைநிர்வாண பெண்கள்..!

496

spainஸ்பெயின் பாராளுமன்றத்தில் கருக்கலைப்பு குறித்த மசோதா நிறைவேறிக்கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்த மூன்று பெண்கள் திடீரென எழுந்து அரைநிர்வாணமாக மாறி, அந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் ஸ்பெயின் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியான Popular Party என்ற கட்சியால் புதிய திருத்தப்பட்ட கருக்கலைப்பு குறித்த மசோதா நிறைவேறுவதாக இருந்தது.

அந்த மசோதா குறித்த குறிப்புகளை பாராளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் உட்கார்ந்திருந்த FEMEN அமைப்பைச் சேர்ந்த மூன்று இளம்பெண்கள் திடீரென எழுந்து தங்கள் மேலாடைகளை நீக்கி, அரைநிர்வாணமாக மசோதாவை எதிர்த்து கோஷம் போட்டனர்.

இதனால் பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பெண் காவல்துறையினர் அழைக்கபப்ட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.